பழநி முருகன் கோவிலில் பக்தர்கள் 4மணி நேரம் காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06நவ 2017 12:11
பழநி: பழநி முருகன் கோவிலில், பக்தர்கள், நான்கு மணி நேரம் காத்திருந்து, தரிசனம் செய்தனர். பழநி மலைக் கோவிலில் நேற்று, அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர். ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில், இரண்டு மணி நேரம் காத்திருந்தனர். மலைக் கோவில் வெளிப் பிரகாரம் வரை குவிந்த பக்தர்கள், பொது தரிசனம் வழியில், நான்கு மணி நேரம் காத்திருந்து, மூலவரை தரிசனம் செய்தனர். தங்கரத புறப்பாட்டை காணவும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.