திருவாடானை: தங்கத்தேர் நிறுத்துவதற்காக பாதுகாப்பு அறை கட்டும் பணி நடந்து வருகிறது. திருவாடானையில் பிரசித்தி பெற்ற ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இக் கோயிலில் பிரதோஷ விழா நாட்களில் சுவாமி வீதி உலா செல்லும் வகையில் தங்கத்தேர் செய்யும் பணி நடந்து வருகிறது. கார்த்திகை வழிபாட்டுகுழுவினர் கூறியதாவது: தங்கத் தேர் செய்யும் பணி பொதுமக்கள் ஒத்துழைப்புடன்நடந்து வருகிறது. தேரை பாதுகாக்கும் வகையில் அம்மன் சன்னதியில் அறை கட்டும் பணிகள் நடந்து வருகிறது.பணிகள் முடிந்தவுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பாதுகாப்பு அறையில் நிறுத்தப்படும், என்றனர்.