பெரியகுளம்: பெரியகுளத்தில் நாமத்வார் பிரார்த்தனை மைய புதிய கட்டடத்தை முரளீதர சுவாமி திறந்து வைத்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். பெரியகுளம் தெற்குஅக்ரஹாரத்தில் புதிதாக கட்டப்பட்ட நாமத்வார் பிரார்த்தனை மையத்தை, முரளீதரசுவாமி திறந்து வைத்தார். மாதுரி ஸகிப்ரேமிக வரதன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோபூஜையை தொடர்ந்து, நாமகீர்த்தனம் பாடப்பட்டது. கிருஷ்ணர், ராதைக்கு சிறப்பு அபி ேஷகமும், ஆராதனையும் நடந்தது. ராம நாமமகிமை பற்றி முரளீதர சுவாமி சொற் பொழிவு நிகழ்த்தி, ஆசி வழங்கினார். அன்னதானம் வழங்கப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று முதல் நவ.,12 வரை, மாலையில்ராமானுஜம் அரங்கில் பிருந்தாவனும், நந்தகுமாரனும் தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவை முரளீதரசுவாமி நிகழ்த்துகிறார். நவ.12 காலை நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ராதாகல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை நாமத்வார் பக்தர்கள் செய்துள்ளனர்.