பதிவு செய்த நாள்
13
நவ
2017
12:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோயிலில், அஷ்டபந்தன மருந்து சேதமானது குறித்து, எழுத்துபூர்வமாக புகார் அளித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் கூறினார். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோயிலில், பிப்., 6ல், கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, லிங்கத்திற்கு சாற்றப்பட்ட, அஷ்டபந்தன மருந்து சேதமானது. இது குறித்து, அறநிலையத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
நேற்று முன்தினம் மாலை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், தனி நபராக பக்தர் போல் வந்து, அண்ணாமலையாரை தரிசனம் செய்தார். அப்போது, மற்ற சன்னதிகளில் உள்ள சுவாமிகளுக்கு மருந்து சாற்றப்பட்டுஉள்ளதை, வெளியிலிருந்தே பார்வையிட்டு, சென்றுள்ளார். கோயில் ஊழியர்கள், அவர் வந்தது குறித்து பரபரப்பாக பேச துவங்கினர். அதன் பிறகே, கோவில் இணை ஆணையர், ஜெகன்நாதனுக்கு, ஐ.ஜி., வந்து சென்றது தெரிந்தது. ஐ.ஜி., பொன், மாணிக்கவேலை போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது, கோயிலில் ஆய்வு செய்யவில்லை. சுவாமி தரிசனம் மட்டும் செய்தேன். அஷ்டபந்தன மருந்து சேதமானது குறித்து, எழுத்துபூர்வமாக பக்தர்கள் புகார் அளித்தால், விசாரணை நடத்தப்படும், என்றார்.