பதிவு செய்த நாள்
16
நவ
2017
11:11
பேரூர் : கோவை மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த கோவில்களில், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலும் ஒன்று. இக்கோவிலில், கடந்த, 1996ம் ஆண்டு, முதுமலை வனப்பகுதியிலிருந்து, கொண்டுவரப்பட்ட கல்யாணி, 27, என்ற யானை உள்ளது. கல்யாணியின் உடல் எடை ஆண்டுக்கு இரண்டு முறை பரிசோதனை செய்யப்படும். இந்நிலையில், நேற்று காலை கொட்டகையில் இருந்த கல்யாணி, பேரூர் செட்டிபாளையம் அருகே உள்ள, எடை மேடைக்கு அழைத்து செல்லப்பட்டு எடை பரிசோதிக்கப்பட்டது. இதில், கல்யாணி, 3,955 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்தது.