Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவண்ணாமலையில் அன்னதானத்துக்கு ... கோயில் அருகே நிழற்குடை வசதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் ஐயப்பன் கோவிலில் 17ல் மண்டல பூஜை துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2017
01:11

திருப்பூர் : திருப்பூர், காலேஜ் ரோடு ஐயப்பன் கோவிலில், 58ம் ஆண்டு மண்டல பூஜைகள், வரும், 17ல் துவங்குகிறது. தர்மசாஸ்தா டிரஸ்ட், ஐயப்பன் பக்த ஜனசங்கம் சார்பில், மண்டல கால உற்சவ பூஜைகளும், கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும், 17ம் தேதி, கணபதி ஹோமத்துடன் மண்டல பூஜை துவங்குகிறது. டிச. 6ம் தேதி மாலை, கொடியேற்ற விழா நடக்கிறது. 7ல், மஹா கணபதி ஹோமம், நவகலச அபிஷேகம், 108 வலம்புரி சங்கு அபிஷேக பூஜைகள் நடக்கிறது. டிச., 8, 9ம் தேதி சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, 10ம் தேதி இரவு, 9:00 மணிக்கு, பள்ளி வேட்டை நடக்கிறது. டிச. 11ம் தேதி பகல், 12:00 மணிக்கு, திருப்பூர் பெருமாள் கோவில் குளத்தில், ஐயப்ப சுவாமிக்கு ஆறாட்டு உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, பனிரெண்டார் திருமண மண்டபத்தில், அன்னதானம் வழங்கப்படுகிறது.

அன்று மாலை, 6:00 மணிக்கு, ஐயப்ப சுவாமியின் திருவீதியுலா, ஈஸ்வரன் கோவிலில் இருந்து, பஞ்ச வாத்தியங்கள், வாண வேடிக்கை, ஒயிலாட்டத்துடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக, கோவிலை வந்தடைகிறது. அன்றிரவு, 9:30 மணியளவில், கொடி இறக்குதல் நடைபெறுகிறது. மண்டல பூஜையில், முக்கிய நிகழ்வாக டிச., 16ம் தேதி, காலை, 8:00 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கி, 17ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு, நிறைவடைகிறது. டிச., 16ம் தேதி, இரவு 7:00 மணிக்கு, கூட்டுவழிபாடு பஜனையும், 22ம் தேதி, மாலை 4:00 மணிக்கு, குத்துவிளக்கு பூஜையும், 23ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, அகண்டநாம பஜனையும் நடைபெற உள்ளது. மண்டல பூஜையை முன்னிட்டு, வரும் 19ம் தேதி முதல், ஜன., 7ம் தேதி வரை, வாரந்தோறும் ஞாயிறு அன்று, ஐயப்ப சுவாமி கோவிலில், காலை, 11:00 மணி முதல், அன்னதானம் வழங்கப்படுகிறது. வரும் 18ம் தேதி முதல், ஜன., 14ம் தேதி வரை, தினமும் மாலை, 6:30 முதல், இரவு 9:00 மணி வரை, கலைநிகழ்ச்சி, பட்டிமன்றம், பஜனை, சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar