Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செஞ்சி சித்தாஸ்ரமத்தில் இன்று ... தேனியில் இருந்து, சபரிமலை செல்லும் வழித்தடம் ஒருவழி பாதையாகிறது? தேனியில் இருந்து, சபரிமலை செல்லும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் ரூ. 304 கோடியில் வளர்ச்சிப்பணிகள் : தேவசம்போர்டு அமைச்சர் தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2017
05:11

சபரிமலை: சபரிமலையில் 304 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சிப்பணிகள் அடுத்த ஆண்டுக்குள் மேற் கொள்ளப்படும், என கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார். சபரிமலையில் மண்டல காலத்தில் செய்யப்பட்டு உள்ள பணிகள் தொடர்பாக சன்னிதானத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:இடது முன்னணி அரசு கடந்த சில நாட்களில் கோயில்கள் மற்றும் தேவசம்போர்டு விஷயத்தில் பெரும் புரட்சியை செய்து உள்ளது. கோயில்களில் பூஜை செய்ய தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஈழவ சமுதாயம் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்துக்கும் இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு உள்ளது. முற்பட்ட சமுதாயத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பில் 10 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கேரள வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர், உறுப்பினரை மாற்றியதற்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லை. கேரளாவின் ஐந்து தேவசம்போர்டில் 3 தேவசம்போர்டின் பதவி காலம் இரண்டு ஆண்டுகளாக உள்ளது. கடந்த ஆண்டுகளில் சபரிமலைக்காக அரசு அனுமதித்த பணத்தில் 40 சதவீதம் வரை செலவு செய்யப்படவில்லை. அடுத்த ஆண்டுக்குள் சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் 304 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சிப் பணிகள் செய்யப்படும். இதில் மத்திய அரசின் 100 கோடி ரூபாயும் அடங்கும்.ஊழல் இல்லாத தேவசம்போர்டு வேண்டுமென்று இடது முன்னணி அரசு விரும்புகிறது. கோயில்களை நிர்வகிப்பவர்கள் கோயிலை விழுங்க கூடியவர்களாக இருக்க கூடாது என்பதுதான் இடது முன்னணி அரசின் நிலைபாடு, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 
temple news
கோபால்பட்டி; கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டி சிவதாண்டவ பாறை ருத்ரலிங்கேஸ்வரர் கோயிலில் நடந்த மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar