பதிவு செய்த நாள்
20
நவ
2017
11:11
பழநி: தைப்பூச திருவிழா நடைபெறும், பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் 20 ஆண்டுகளுக்குபின் நவ.,24ல் மகா கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, கணபதி ஹோமத்துடன் யாகபூஜைகள் துவங்கியது.
பழநிமுருகன் கோயில் உபகோயிலான கிழக்குரதவீதி பெரியநாயகியம்மன் கோயில் பல நுாற்றாண்டுகள் பழமையானது. பாண்டியர், சேரர் கால மன்னர்கள் திருப்பணிகள் செய்துள்ளனர். இக்கோயிலில் கடந்த 1998ம் ஆண்டு கும்பாபிேஷகம் நடந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ரூ.96லட்சம் செலவில் கும்பாபிேஷக திருப்பணிகள் நடந்தது அதில் கோயில் கற்துாண்கள், சிலைகள் பழமை மாறாமல் புதுக்கப்பட்டுள்ளது. கும்பாபிேஷகம் நடத்துவதற்காக கடந்த நவ.,2ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இன்று நவ.,20ல் கணபதிபூஜையுடன் தொடர்ந்து ஆறுகால யாகவேள்வி பூஜைகள் துவங்கியது. நவ.,24ல் காலை 6:15மணி 7:15 மணிக்குள் மகாகும்பாபிேஷகம் நடக்கிறது. 130 சிவாச்சாரியர்கள் பங்கேற்கின்றனர்.திருக்கல்யாணம் நவ.,24 கும்பாபிேஷகம் முடிந்தபின் அன்று மாலை 6:00 மணிக்கு கைலாசநாதர், பெரியநாயகியம்மனுக்கும் மற்றும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்மேனகா செய்கின்றனர்.