புட்டபர்த்தி: புட்டபர்த்தியில் உள்ள சத்யசாய் பிரசாந்தி நிலையத்தில் பெண்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. உண்மை மற்றும் கலாசாரத்தின் களஞ்சியங்கள் பெண்கள் என பகவான் சத்யசாய் பெண்களை போற்றியுள்ளார். பெண்களை போற்றும் வகையில் கடந்த 1995 நவம்பர் 19 முதல் சர்வதேச பெண்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி இன்று (19 ம் தேதி ) நடந்த நிகழ்ச்சியில், உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி ஸ்ரீசத்யசாய் உயர் கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் காலை 8 மணியளவில் வேத மந்திரங்களை வாசித்தனர். விழாவில் ஸ்ரீசத்யசாய் ஈஸ்வரம்மா பெண்கள் நல டிரஸ்ட் மேலாண்மை இயக்குநர் சேதன ராஜூ குத்துவிளக்கை ஏற்றி வைத்து துவக்க உரை ஆற்றினார். விழா இறுதியில் மங்கள ஆர்த்தி காட்டப்பட்டது.