பதிவு செய்த நாள்
22
நவ
2017
12:11
ஓமலூர்: சத்ய சாய்பாபாவின், 92வது பிறந்தநாளை முன்னிட்டு, மின் அலங்கார தேர்பவனி நடந்தது. ஓமலூர், சத்ய சேவா சமிதியில், சாய்பாபாவின், 92வது பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, சமிதியில் உள்ள சாய்பாபா படத்துக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, பஜனை நடந்தது. தொடர்ந்து, மின் அலங்காரத் தேரில், சாய்பாபா உருவ படம் வைத்து, தாலுகா அலுவலகம், கடைவீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட முக்கிய வீதி வழியாக சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.