பதிவு செய்த நாள்
22
நவ
2017
12:11
சேலம்: சுகவனேஸ்வரர் கோவில் உண்டியலில், 7.48 லட்சம் ரூபாய் காணிக்கை இருந்தது. சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில், எட்டு நிரந்தர உண்டியல்கள் உள்ளன. இவற்றை திறந்து, காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. கோவில் உதவி ஆணையர் தமிழரசு, நாமக்கல் நரசிம்மர் கோவில் உதவி ஆணையர் ரமேஷ் ஆகியோர் கண்காணித்தனர். ஜெயராம் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர், காணிக்கை பணம், நகைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், ஏழு லட்சத்து, 48 ஆயிரத்து, 193 ரூபாய், 98 கிராம் தங்கம், 457 கிராம் வெள்ளி, 20 அமெரிக்க டாலர் ஆகியவை இருந்தன.