பதிவு செய்த நாள்
23
நவ
2017
01:11
நாமக்கல்: மோகனூர் அடுத்த, கணபதிபாளையத்தில் அமைந்துள்ள ராஜ கணபதி, செல்லாண்டியம்மன் கோவிலில் கும்பாபி?ஷக விழா நாளை நடக்கிறது. அதை முன்னிட்டு, இன்று காலை, 7:40 மணிக்கு விநாயகர் வழிபாடு, கணபதி யாகம், மஹாலட்சுமி யாகம் நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு தீர்த்தக்குடம் எடுத்துவர காவிரி ஆற்றுக்கு செல்லுதல், மாலை, 6:00 மணிக்கு முளைப்பாரி அழைத்தல், கடம் யாக சாலை பிரவேசம், தீபாராதனை, முதற்காலம் நிறைவு, கோபுர கலசம் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை அதிகாலை, 4:30 மணிக்கு இரண்டாம் கால யாகம் நிறைவு, தீபாராதனை, காலை, 6:30 மணிக்கு கடம் புறப்பாடு, 7:00 மணிக்கு ராஜ கணபதி கோவில் கோபுர கலசத்திற்கு, 7:30 மணிக்கு மூலவர் ராஜ கணபதிக்கு, செல்லாண்டி அம்மனுக்கு கும்பாபி?ஷகம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர் மக்கள், பக்தர்கள் செய்துள்ளனர்.