பதிவு செய்த நாள்
27
நவ
2017
11:11
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரசாத கடையில், விலை பட்டியல் விபரம் அடங்கிய பலகை வைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. காஞ்சிபுரத்தில், பழமையான வைணவ தலமாகவும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சபரிமலை சீசன் துவங்கியுள்ள நிலையில், தினமும் ஏராளமான அய்யப்ப பக்தர்களும் வருகின்றனர். கோவில், வளாகத்தில் பிரசாதக்கடை உள்ளது. இதில், புளியோதரை, தயிர்சாதம், கோவில் இட்லி, அதிரசம், முறுக்கு, தட்டை உள்ளிட்ட பிரசாதம் விற்பனை செய்யப்படுகின்றன. பிரசாதங்களின் விலையை அறிந்துகொள்ள, விலை பட்டியல் விபரம் அடங்கிய பலகை இல்லாததால், பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.