பதிவு செய்த நாள்
28
நவ
2017
12:11
பெ.நா.பாளையம்: துடியலுார் அருகே தடா கம் பாப்பநாயக்கன்பாளையத்தில், நவநரசிம்மர் சிலையுடன் கட்டப்பட்ட, புதிய லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் டிச.,1ல் நடக்கிறது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, இக்கோவில் புதியதாக நிர்மாணம் செய்யப்பட்டு, கும்பாபிஷேக விழா டிச.,1 ல் நடக்கிறது. விழா வரும், 29ல் துவங்குகிறது. தீர்த்தக்குடங்கள், முளைப்பாரி ஊர்வலம், தொடர்ந்து யாகசாலை பிரவேசம், ேஹாமம், திருமஞ்சனம், அலங்காரம், தீர்த்த பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி ஆகியன நடக்கிறது. டிச.,1ல் காலை ேஹாமம், திவ்யபிரபந்தம் நாடிசந்தானம் நிகழ்ச்சிகளை தொடர்ந்து காலை, 9:00மணிக்கு, மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.தொடர்ந்து பக்தி சொற் பொழிவு, அன்னதானம், பெருமாள் திருவீதி புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடக் கின்றன. கோவிலின் சிறப்புகள் குறித்து நிர்வாகிகள் கூறுகையில்,‘ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள , அகோபிலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் லட்சுமி நவநரசிம்மர் சிலை, இங்குள்ள மூலவர் விமானத்தில் ஸ்தா பிக்கப்பட்டுள்ளது. இது, இக்கோவிலின் தனிச்சிறப்பு. இக்கோவிலை தரிசித்தால், சிங்கவேல் குன்றப்பெருமாளை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்’ என்றனர்.