சபரிமலையில் அப்பம், அரவணை விற்பனைக்கு கூடுதல் கவுன்டர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2017 11:11
சபரிமலை: அப்பம் அரவணை விற்பனைக்காக சன்னிதானத்தில் கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.சபரிமலையில் முக்கிய வழிபாட்டு பிரசாதம் அப்பம், அரவணை. 18ம் படிக்கு வலது புறம் உள்ள கவுன்டர்களில் இந்த பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது. கூட்டம் அதிகமாகும் நேரங்களில் பக்தர்கள் பல மணி நேரம் கியூவில் நின்றால் மட்டுமே பிரசாதம் கிடைக்கும். இதனை போக்க மாளிகைப்புறம் கோயில் நடைப்பந்தல் அருகே உள்ள கட்டடத்தில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டன. கூட்டம் அதிகமாகும் போது இரண்டு இடங்களிலும் நீண்ட வரிசை காணப்படுகிறது.இதனால் மாளிகைப்புறத்தில் பழைய அன்னதான மண்டபத்தில் கூடுதல் பிரசாத கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மூன்று இடங்களில் பக்தர்கள் பிரசாதம் வாங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது 6.50 லட்சம் டின் அரவணையும், 5 லட்சம் பாக்கெட் அப்பமும் ஸ்டாக் உள்ளது. தொடர்ந்து பிரசாதம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.பம்பை கணபதி கோயில் அருகே பக்தர்களுக்கு அவல் மற்றும் மோதகம் பிரசாதம் கிடைக்கிறது. அவல் ஒரு பாக்கெட் 80 ரூபாய். 6 மோதகம் கொண்ட ஒரு பாக்கெட் 40 ரூபாய்.