பதிவு செய்த நாள்
30
நவ
2017
01:11
ஓமலூர்: செட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தீர்த்தக்குடம் ஊர்வலம் நடந்தது. ஓமலூர் செவ்வாய்ச்சந்தை அருகே, ஆயிர வைசிய சமூகத்தின் பழமையான கோவிலான, செட்டி மாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு, இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஆலய வளாகத்தில், விநாயகர், சுப்ரமணியர், துர்க்கையம்மன் சிலைகள் உள்ளன. நேற்று காலை, காசிவிஸ்வநாதர் கோவிலில் விநாயகர் பூஜை, கோ பூஜை, கணபதி ?ஹாமம் முடிந்து, பக்தர்கள் தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்துக்கொண்டு, கடைவீதி, தாலுகா அலுவலகம் ரோடு வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். இன்று காலை, 9:30 மணிக்கு மூலஸ்தான விமான கும்பாபி?ஷகம் நடைபெற உள்ளது.