பதிவு செய்த நாள்
30
நவ
2017
01:11
மொடக்குறிச்சி: காங்கயம்பாளையத்தில் உள்ள, நட்டாற்றீஸ்வரர் கோவிலில், உலக நாடுகளின் சர்வதேச நீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரியா தரிசனம் செய்தார். ஈரோடு மாவட்டம், நஞ்சை பஞ்சாயத்திற்குட்பட்ட, காங்கயம்பாளையம் காவிரி ஆற்றில், நட்டாற்றீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, அகஸ்தீஸ்வர முனிவர் வழிபாடு நடத்தியுள்ளார். இந்நிலையில், நேற்று காலை, 11:45 மணிக்கு, சர்வதேச நீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரி ஸ்ரீநட்டாற்றீஸ்வரர் கோவிலுக்கு, தனது நண்பர் பிரேம் பண்டாரியுடன் வந்தார். அவர்களை, மாவட்ட முதன்மை நீதிபதி உமாமகேஸ்வரி, கலெக்டர் பிரபாகர் மற்றும் கோவில் சிவாச்சாரியார்கள் வரவேற்றனர். உச்சிகால பூஜையில் கலந்து கொண்ட நீதிபதி தல்வீர் பண்டாரியா, நட்டாற்றீஸ்வரர், அகஸ்தீஸ்வரர் சுவாமியை தரிசனம் செய்தார். பின்னர் சிறிது நேரம் கோவிலில் தங்கி விட்டு, காரில் புறப்பட்டு சென்றார்.