தி.மலை தீபம்: 2,500 பக்தர்கள் மலையேற கோர்ட் அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2017 02:11
சென்னை : கார்த்திகை தீபத்தின் போது 2,500 பக்தர்கள் மலையேற அனுமதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், டிச.,2 ல் கார்த்திகை தீபம் ஏற்றும்போது பக்தர்கள் மலைமேல் ஏற தடைவிதித்து மாவட்ட நிர்வாகம் அக்.,7 ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் 2,500 பக்தர்களை அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கியது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு : மகா தீபத்திருவிழா அன்று காலை 6 மணி முதல் 2,500 பக்தர்களை மட்டும் மலைக்கு செல்ல அனுமதிக்கலாம். அதற்கு முறையாக டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும். கற்பூரம், தீப்பெட்டி ஆகியவை மலைக்கு கொண்டு செல்லக்கூடாது. தண்ணீர் பாட்டில், நெய் கொண்டு செல்லலாம். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நான்கு வாரத்திற்கு தள்ளிவைத்தார்.