தமிழ் ஆண்டின் முதல் மாதம் சித்திரை. ஆனால், ஒரு காலத்தில் கார்த்திகையை முதல் மாதமாகக் கொண்டு புத்தாண்டை துவக்கினர். ரிக் வேதத்திலும் நட்சத்திரங்களை கணக்கிடும் போது, கார்த்திகையை முதலாவதாகக் கொண்டு எண்ணப்படுகிறது. சிவனுக்கும், முருகனுக்கும் கார்த்திகை நட்சத்திரத்துடன் தொடர்பிருப்பதால் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது.