திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று முதல் தங்க தேரோட்டம் தொடங்கியது. இக் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த தங்க தேர் உருவாக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை இருந்து வந்தது. இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளாக தங்க தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டமும் விடப்பட்டது. நேற்று தங்க தேர் கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜைக்கு பின் வலம் வந்தது. கோயில் செயல் அலுவலர் செல்வி, அறங்காவலர் குழு தலைவர் ஜெய்சங்கர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் தேரை இழுத்தனர். அறங்காவலர் குழு தலைவர் ஜெய்சங்கர் கூறுகையில, பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற தங்கதேர் நாளை முதல் இழுக்கலாம். நபர் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் கோயில் அலுவலகத்தில் செலுத்தி தேர் இழுக்கலாம், ஒன்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பணம் செலுத்தும் பட்சத்தில் நான்கு திசைகளுக்கும் தலா ஒருவர் என்ற வீதத்தில் தங்க தேர் இழுக்க அனுமதிக்கப்படுவார்கள், என்றார்.