பதிவு செய்த நாள்
04
டிச
2017
11:12
சேலம்: கோட்டை பெருமாள் கோவிலில், முகூர்த்தக்கால் நடப்பட்டது. வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, சேலம், கோட்டை பெருமாள் கோவிலில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு அழகிரிநாதர், சுந்தரவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, கோவில் அர்ச்சகர் சுதர்சன பட்டாச்சாரியார் தலைமையில், முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர். வரும், 18 முதல், 28 வரை பகல் பத்து உற்சவம், 29ல் சொர்க்கவாசல் திறப்பு உற்சவம், 30 முதல், ஜன., 9 வரை ராப்பத்து உற்சவம் நடக்கிறது. இதில், தினமும் பெருமாள், தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்படும்.