பதிவு செய்த நாள்
05
டிச
2017 
11:12
 
 திருத்தணி: சதாசிவலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த லட்ச தீபத் திருவிழாவில், திரளான பெண்கள், பங்கேற்று, நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். திருத்தணி, பழைய தர் ம ராஜா கோவில் தெருவில் உள்ளது, மனோண்மணி உடனுறை சதாசிவலிங்கேஸ்வரர் கோவில். அபிஷேகம் இக்கோவிலில் ஆண்டு தோறும், கார்த்திகை மாதம் மூன்றாவது சோமவாரத்தையொட்டி, லட்ச தீபத் திருவிழா நடந்து வருகிறது.அந்த வகையில், நேற்று, லட்ச தீபத் திருவிழா நடந்தது. விழாவையொட்டி, காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.
தீபாராதனை: மாலை, 6:00 மணிக்கு, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில், நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இந்த லட்ச தீப திருவிழாவில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.