பழநி : பழநி மலைக்கோயில் கிரிவீதி, சின்னவிநாயகர் அழகுநாச்சியம்மன் கோயிலில், நாளை கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, நேற்று கணபதி ேஹாமத்துடன் சிறப்புயாக பூஜைகள் நடக்கிறது. பழநி கிழக்குகிரிவீதி சின்னவிநாயகர், அழகு நாச்சியம்மன் கோயிலில் 1999ம் ஆண்டில் கும்பாபிேஷகம் நடந்து. அதன்பின் 18 ஆண்டுகளுக்குப்பின் நாளை கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று காலையில் கணபதிபூஜை, நவக்கிரக ேஹாமம் பூஜைகள் நடந்தது. இன்று காலை 11மணிக்கு மருந்து சாற்றுதல், மூன்றாம்கால யாகசாலைபூஜை என 4 காலயாக பூஜை நடக்கிறது. நாளை (டிச.,6ல்) காலை 6:25மணிக்கு அழகு நாச்சியம்மன், சின்னவிநாயகர்கோயிலில் கும்பாபிேஷகம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா செய்கின்றனர்.