பதிவு செய்த நாள்
11
டிச
2017
02:12
காஞ்சிபுரம்:சாய் பாபாவின், பிறந்த நாள் விழாவையொட்டி, காஞ்சிபுரத்தில் பல்லக்கு ஊர்வலம் நடந்தது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், காஞ்சிபுரம் சத்யசாய் சேவா சமிதி சார்பில், சத்ய சாய் பாபாவின், 92வது பிறந்த நாள் விழாவையொட்டி, சத்யசாய் பாபாவின் படம், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கு ஊர்வலம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் பி.எஸ்.கே தெருவில் உள்ள, பாண்டு ரங்க சுவாமி கோவிலிலிருந்து புறப்பட்ட ஊர்வலம், சேக்குப்பேட்டை சாலியர் தெரு, கவரைத்தெரு வழியாக கோவிலை வந்தடைந்தது. பின், தனியார் மண்டபத்தில் சாய் பால விகாஸ் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அறிவுத்திறன் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை, காஞ்சிபுரம் சமிதி கன்வீனர், குருமார்கள் மற்றும் சமிதி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.