பதிவு செய்த நாள்
12
டிச
2017
12:12
திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் கோவிலில், வரும், 14ம் தேதி, தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான, திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம், சுவாதி நட்சத்திரத்தில், தெப்பத் திருவிழா நடந்து வருகிறது. அந்த வகையில், வரும், 14ம் தேதி தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது. அன்று, காலை, 10:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு, கோவிலின் பின்புறம் உள்ள ஆலங்காட்டீசர் சென்றாடு தீர்த்த குளத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், உற்சவர் வண்டார் குழலியம்மன் உடனுறை வடாரண்யேஸ்வர சுவாமி சிறப்பு அலங்காரத்தில், எழுந்தருளி வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பக்தி இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.