திருத்தணி:ஆஞ்சனேயர் கோவில்களில், 17ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது. திருத்தணி அடுத்த, நல்லாட்டூர் வீரமங்கள ஆஞ்சனேயர் கோவில், திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள வீரஆஞ்சனேயர் கோவில் மற்றும் கே.ஜி.கண்டிகை பஞ்சமுக ஆஞ்சனேயர் ஆகிய கோவில்களில், 17ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதையொட்டி, கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம், லட்சார்ச்சனை மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடக்கிறது.மாலையில், ஆன்மிக சொற்பொழிவும், இரவு, உற்சவர் வீதியுலாவும் நடைபெறுகிறது. இது தவிர, 108 பால்குட ஊர்வல நிகழ்ச்சியும் நடக்கிறது.