பதிவு செய்த நாள்
18
டிச
2017
12:12
செய்தொழிலில் சிகரத்தை தொட விரும்பும் சிம்ம ராசி அன்பர்களே!
ராசிக்கு 3-ல் இருக்கும் செவ்வாயால் ஆற்றல் மேம்படும். பண வரவு படிப்படியாக உயரும். குடும்பத்திற்கு தேவையான பொருள் வாங்கலாம். மனதில் பக்தி உயர்வு மேம்படும். முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். 6-ல் இருக்கும் கேதுவால் அக்கம்பக்கத்தினர் தொல்லை மறையும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்கலாம். சூரியன், விருச்சிகத்தில் இருந்து தனுசுவுக்கு மாறினாலும் நன்மை தர மாட்டார். சுக்கிரன் டிச.21-ல் விருச்சிகத்தில் இருந்து தனுசுவுக்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை அளிப்பார். புதன் ஜன.4- வரை விருச்சிகத்தில் நின்று நற்பலன் தருவார்.
சனிபகவான் டிச. 19-ல் 5-ம் இடத்திற்கு செல்வது சிறப்பான இடம் அல்ல. குடும்பத்தில் பிரச்னை ஏற்படுத்துவார். அவர் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வையும் சிறப்பாக உள்ளது. புதிய வீடு, -மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை உயரும். புதிய உறவினரால் உதவி கிடைக்கும்.
சுபவிஷய பேச்சு நடந்தேறும். டிச.21க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். பொன், பொருள் சேரும். ஜன. 1,2-ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் டிச.16,17, ஜன.12,13 ல் அவர்கள் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஜன.5,6,7ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். மாத இறுதியில் குடும்ப விஷயத்தில் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து போகவும். தொழில், வியாபாரத்தில் வருமானத்திற்கு பஞ்சம் இருக்காது. கோயில், புண்ணிய காரியங்களுக்கான தொழில்கள் சிறந்து விளங்கும். கடந்த காலத்தில் பெண்கள் வகையில் இருந்த பிரச்னை மறையும். ஆனால் போட்டியாளர்களின் தொல்லை தலை தூக்கலாம். டிச.21,22 -ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். ஜன. 3,4,8,9-ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஜன.4-க்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.
பணியாளர்கள் முன்னேற்றம் காணலாம். தனியார் துறையினர் பணிச்சுமைக்கு ஆளா னாலும், அதற்குரிய வருமானம் கிடைக்கப் பெறுவர். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேறும். சக ஊழியர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கு மேம்படும். ஜன.4- க்கு பிறகு வேலை நிமித்தமாக குடும்பத்தை பிரிய நேரிடலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வேலையில் நிதானம் தேவை. சிலருக்கு திடீர் இடமாறறம் ஏற்படலாம். டிச.30,31ல் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சக கலைஞர்கள் ஆதரவுடன் இருப்பர். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு செவ்வாயால் புதிய பதவி தேடி வரும். டிச.18,19,20ல் வீண் குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர். அதே நேரம் மாத இறுதியில் அதிக சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதுஇருக்கும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது நல்லது. விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறை இருக்காது. கீரை வகைகள், காய்கறிகள், பயறு வகைகள், நெல், கோதுமை போன்றவற்றில் மகசூல் அதிகரிக்கும். வழக்கு விவகாரத்தில் முடிவு திருப்திகரமாக இருக்கும். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு.
பெண்கள் குடும்பத்தினரின் மத்தியில் நற்பெயர் காண்பர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உங்களால் குடும்ப வாழ்வு சிறக்கும். சுப விஷய பேச்சில் நல்ல முடிவு கிடைக்கும். டிச.21க்கு பிறகு குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீர்கள். தோழிகள் ஆதரவுடன் இருப்பர்.
ஜன.10,11-ல் ஆடை, -அணிகலன் சேரும். டிச.23,24,25ல் உற்சாகமாக செயல்படுவீர்கள். உடல்நலம் சீராக இருக்கும்.
* நல்ல நாள்: டிச.21, 22, 23, 24, 25, 30, 31, ஜன.1, 2, 5, 6, 7, 10, 11
* கவன நாள்: டிச. 26, 27 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3, 5 நிறம்: வெள்ளை, மஞ்சள் பரிகாரம்
* பரிகாரங்கள்:
● தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை
● விநாயகருக்கு நெய்விளக்கு
● ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசி அர்ச்சனை