பதிவு செய்த நாள்
18
டிச
2017
12:12
பெற்றோர் மீது பேரன்பு கொண்ட கன்னி ராசி அன்பர்களே!
முக்கிய கிரகங்களில் 2-ல் குரு, 3ல் சுக்கிரன், 11-ல் ராகு தொடர்ந்து நன்மை தருவதால் இந்த மாதம் சிறப்பாக அமையும். புதன், ஜன. 4-க்கு பிறகு நன்மை தருவார். இது வரை சனிபகவான் மூன்றாம் இடத்தில் இருந்து நன்மை தந்து கொண்டிருந்தார். டிச.19-ல் 4-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். குடும்பத்தில் வீண் விரோதம் உருவாகலாம். ஊர் விட்டு, ஊர் செல்லும் நிலை உருவாகும். தாயை பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம். சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3-ம் இடத்து பார்வையால் நன்மை உண்டாகும்.
பொன், பொருள் சேரும். சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். ஜன.8,9ல் சகோதர வழியில் நன்மை உண்டாகும். விருந்து, விழா என செல்வீர்கள். ஜன.3,4ல் விருந்தினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் டிச. 18,19,20 ல் அவர்கள் வகையில் கருத்து வேறுபாடு உருவாகலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். செவ்வாயால் நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.
ஜன.4-க்கு பிறகு குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கணவன், -மனைவி இடையே அன்பு மேலோங்கும். சுபவிஷயம் குறித்த பேச்சில் முன்னேற்றம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் பகைவர் சதி இனி எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். ஆனால் புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். ஜன.4- வரை அரசாங்க வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். டிச.23,24,25ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். ஜன.5,6,7,10, 11ல் சந்திரனால் தடை ஏற்படலாம்.
ஜன.4-க்கு பிறகு தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணியிடத்தில் நற்பெயரும், மதிப்பும் கிடைக்க பெறுவர். ஜன.4- வரை அரசு பணியாளர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். அதன் பிறகு அரசு வகையில் நன்மை கிடைக்கும். தனியார் துறையினருக்கு புதிய பதவி தேடி வரும். மேல் அதிகாரிகள் அனுசரணையுடன் இருப்பர். ஜன.12,13ல் எதிர்பாராத வருமானம் உண்டாகும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசு வகையில் பரிசு, பாராட்டு கிடைக்க பெறலாம். பொது நல சேவகர்கள், அரசியல்வாதிகள் தீவிர முயற்சி எடுத்து முன்னேற வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மாணவர்கள்- ஜன.4- வரை அக்கறையுடன் படிப்பது நல்லது. அதன் பின் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவர். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். குறிப்பாக கரும்பு, நெல் கோதுமை, சோளம், கேழ்வரகு ஆகிய பயிர்களில் அதிக வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். கால்நடை மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
பெண்கள்- குடும்ப வாழ்வில் குதூகலம் காண்பர். தோழியர் உதவிகரமாக இருப்பர். கணவரிடம் அன்பு அதிகரிக்கும். டிச.21- க்கு பிறகு மதிப்பு அதிகரிக்கும். உறவினரால் உதவி கிடைக்கும். ஜன.4க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு காண்பர். டிச.16,17, ஜன.12,13ல் புத்தாடை, ஆபரணம் வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். டிச.26,27- ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும். சகோதரர்களால் உதவி கிடைக்கும். உடல்நலம்- சிறப்பாக இருக்கும்.
* நல்ல நாள்: டிச.16, 17, 23, 24, 25, 26, 27, ஜன.1, 2, 3, 4, 8, 9, 12, 13
* கவன நாள்: டிச.28, 29 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: -5,7 நிறம்: வெள்ளை, மஞ்சள்
* பரிகாரம்:
● ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு
● பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு வில்வ மாலை
● சுவாதியன்று நரசிம்மருக்கு நெய் தீபம்