அவிநாசி : அவிநாசி வியாசராஜர் பஜனா மண்டலி அறக்கட்டளை, பழநி பாதயாத்திரைக்குழு, பெங்களூரு ஸ்ரீவாரி பவுண்டடேஷன் இணைந்து ஸ்ரீநிவாச திருக்கல்யாண மங்கள மஹோற்சவ நிகழ்ச்சியை நாளை நடத்துகின்றன. சூளை அருகிலுள்ள கொங்கு கலையரங்கில் நாளை மாலை 6.00 மணி முதல் நடக்கிறது. திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு இரவு 7.00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், மாப்பிள்ளை அழைப்பு, திருக்கல்யாணம், மங்கல ஆரதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.