பதிவு செய்த நாள்
16
டிச
2011
11:12
கன்னியாகுமரி : கொட்டாரம் ராமர்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா வரும் 23, 24 தேதிகளில் நடக்கிறது.முதல் நாள் விழாவான 23ம் தேதி காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், 6.30 மணிக்கு அபிஷேகம், 8 மணிக்கு சிறப்பு தீபாராதனை, 9 மணிக்கு நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் மற்றும் சுதர்சன ஹோமம், 10.30 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனை, 11 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, மாலை 6 மணிக்கு தீபாராதனை, 6.30 மணிக்கு வினாடி வினா போட்டி, இரவு 7 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, 9.15 மணிக்கு தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கல் ஆகியன நடக்கிறது.இரண்டாம் நாள் (24ம் தேதி) காலை 5 மணிக்கு கலச பூஜை, 9 மணிக்கு ஸ்ரீராமஜெயம் எழுத்துபோட்டி, 10 மணிக்கு பஜனை, 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, 11.45 மணிக்கு அன்னதானம் ஆகியன நடக்கிறது. நிகழ்ச்சியை அமைச்சர் பச்சைமால், முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். மாலை 6 மணிக்கு தீபாராதனை, 6.30 மணிக்கு உலக அமைதி பிரார்த்தனை, இரவு 7 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, 8.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், 9.15 மணிக்கு தீபாராதனை ஆகியன நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் பக்தர்கள் சங்கம் மற்றும் ஸ்ரீராமர், ஸ்ரீஅனுமர் ஆன்மிக பண்பாட்டு கல்வி அறக்கட்டளை செய்துள்ளது.