மயிலாடுதுறை: நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் பழமை வாய்ந்த ராஜகோபால சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் சுவாமி தனிச் சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார்.
ராவணன் வதத்திற்கு பிறகு கடலுக்கடியில் தவமிருந்த ரத்த பிந்து, ரத்த ராட்சசனை திருமாளின் சக்கரம், இந்திரன் உள்ளிட்டோரின் ஆயுதங்கள் மற்றும் சிவபெருமான் வழங்கிய நெற்றிக்கண்ணுடன் சென்று அழித்துவிட்டு ஆஞ்சநேய சுவாமி ஆனந்தமயமாக எழுந்தருளியதால் இ த்தலம் ஆனந்தமங்கலம் என பெயர் பெற்றது. அதுவே தற்போது அனந்தமங்கலம் என அழைக்கப்படுகிறது. ஆஞ்சநேயர் 10 கரங்களுடன், பத்துவித ஆயுதங்கள், நெற்றிக்கண்ணுடன் காட்சியளிக்கிறார். அனுமன் தலமான இங்கு அனுமன் ஜெயந்தி, அமாவாசை விஷேச நாட்களாக உள்ளது. திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயரை சரணாகதியடைந்தால் புத்திகூர்மை, தேக வலிமை உள்ளிட்ட சகல நன்மைகள் கிடைப்பதுடன்,ஆஞ்சநேய சுவாமியின் வாலில் நவகிரகங்கள் இருப்பதால் அவரை வழிபடுபவர்களுக்கு கிரக பாவம், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு மிக்க அனந்தமங்கலம் ஸ்ரீ திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேய சுவாமி கோயிலில் அனுமன் அவதரித்த, மார்கழி மாத மூல நட்சத்திர திருநாளான நேற்று அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவையொட்டி ஆஞ்சநேய சுவாமியை கோயில் மண்டபத்தில் எழுந்தருளசெய்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொ டர்ந்து ஆஞ்சநேய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்க மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேய சுவாமியை தரி சனம் செய்தனர். பூஜைகளை மாதவன் பட்டாச்சாரியார் தலைமையிலானோர் செய்துவைத்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சிவக்குமார் செய்திருந்தார்.