கரூர்: கரூர் ஐயப்ப சேவா சங்கம் சார்பில், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகே உள்ள ஐய்யப்பன் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. விழாவில், உற்சவர் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, லட்சார்ச்சனையுடன், ஹோமங்கள் நடத்தி, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை பசுபதி ஆஞ்சநேயர் திருவீதி உலா நடந்தது.