பதிவு செய்த நாள்
19
டிச
2017
03:12
ஓமலூர்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, வீர ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஓமலூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று அதிகாலை முதல் சிறப்பு அபி?ஷகம், அலங்காரம் செய்யப்பட்டு, 1,008 வடைமாலை, வெற்றிலை மாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காருவள்ளி பிரசன்ன வெங்கட் ரமண சுவாமி கோவிலில் உள்ள வீரபக்த ஆஞ்சநேயருக்கு, காலை, 9:00 மணிக்கு சீர்வரிசை புறப்பாடு, திருமஞ்சனம், சந்தனகாப்பு சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டு, 1,008 வடைமாலை சாத்தப்பட்டு, அன்னவகை பிரசாதங்கள் வைத்து, சிறப்பு பூஜை நடந்தது.