புதுச்சேரி: தட்டாஞ்சாவடி கம்பளி சுவாமி மடத்தில், யோக மகரிஷி டாக்டர் சுவாமி கீதானந்த கிரி குரு மகராஜ், 24வது ஆராதனை விழா நேற்று நடந்தது. தட்டாஞ்சாவடி கம்பளி சுவாமி மடத்தில், கம்பளி ஞான தேசிக சுவாமிகளின் 144வது ஆராதனை விழா மற்றும் யோக மகரிஷி டாக்டர் சுவாமி கீதானந்த கிரி குரு மகராஜ் 24வது ஆராதனை விழா நடந்தது. இதனையொட்டி, காலை 6.05 மணிக்கு கம்பளி சுவாமி மடத்தில் கொடியுடன் வலம் வருதல் மற்றும் கொடி ஏற்றம் நடந்தது. யோகாச்சாரினி டாக்டர் ஆனந்த பாலயோகி தலைமையில் பக்தி பாடல்கள், பஜனைகள், கீர்த்தனைகள் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையில், பால், சந்தனம், பன்னீர், மஞ்சள் ஆகிய மங்கள திரவியங்களால் திருமஞ்சனம் நடந்தது. பின்னர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு மதியம் சமபந்தி விருந்து நடந்தது. ஏற்பாடுகளை யோகாஞ்சாலி நாட்டியாலாய மேலாளர் சண்முகம் செய்திருந்தார்.