பதிவு செய்த நாள்
20
டிச
2017
12:12
பொள்ளாச்சி;பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சனிப்பெயர்ச்சியையொட்டி, நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், சனிபகவான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, ேஹாமம் மற்றும் நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிேஷகம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. அதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பரிகார ராசிக்காரர்கள், அர்ச்சனை செய்து சனீஸ்வரரை வழிபட்டனர். பொள்ளாச்சி டீச்சர்ஸ் காலனி வலம்புரி சித்தி விநாயகர் கோவிலில் நேற்று மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், சனிப்பெயர்ச்சி பரிகார வேள்வி, மகா பூர்ணாஹுதி, சனீஸ்வரருக்கு அபிேஷகம் நடந்தது.
கப்பளாங்கரை பரமசிவன் கோவிலில் சனிப்பெயர்ச்சியையொட்டி, காலை, 9:30 மணிக்கு, விநாயகர் வழிபாடு, நவக்கிரக வேள்வி, சனீஸ்வரர் சிறப்பு வேள்வி, நட்சத்திர பரிகார வேள்வியும், சனீஸ்வரருக்கு மகா அபிேஷகம், அர்ச்சனை, அன்னதானம் நடந்தது. பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில், நவக்கிரக ேஹாமம், 1,008 சக்ஸ்ரநாம அர்ச்சனை, அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. லட்சுமி நரசிம்மர் கோவில், பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில், ஐயப்பன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன.
வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று காலை, 10:00 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா துவங்கியது. சனீஸ்வரருக்கு சிறப்பு யாக பூஜையும், சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. வால்பாறையில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று சனிப்பெயர்ச்சி விழா, ேஹாமங்கள், சிறப்பு வழிபாடுகள் நடந்தது.