சஞ்சீவி மலையை ஒரு கையிலும், இன்னொரு கையில் கதையையும் தாங்கி நிற்கும் அனுமனைப் பார்க்க வேண்டுமானால் ஆந்திர மாநிலம் செகந்திரபாத் செல்ல வேண்டும். இங்குள்ள ரயில்வே ஸ்டேஷன் அருகே கோயில் உள்ளது. பத்து கரங்களுடன் காட்சி தரும் இவர் வராகர், கருடர், ஆஞ்சநேயர், நரசிம்மர், ஹயக்ரீவர் ஆகிய ஐந்து முகங்களுடன் பஞ்சமுக ஆஞ்சநேயராகவும் காட்சி தருகிறார்.சஞ்சீவி மலைராஜபாளையம் மற்றும் கன்னியாகுமரி அருகில் உள்ள மலைகள் பல மூலிகைகளை கொண்டுள்ளது. இலங்கையில் ராவணனுடன் போர் செய்த போது லட்சுமணன் மூர்ச்சையானான். அவனை எழுப்ப ஒரு மூலிகையைப் பறித்து வரும் படி அனுமனை அனுப்பினார் ராமன். எந்த மூலிகை எனத்தெரியாததால் ஒரு மலையையே பெயர்த்துக் கொண்டு வானவெளியில் பறந்து வந்தார் அனுமன். அதிலிருந்து சில துண்டுகள் கீழே விழுந்தன. அவையே ராஜபாளையம் அருகிலும், கன்னியாகுமரி அருகிலும் இருப்பதாக சொல்வதுண்டு. மூலிகை கொண்ட மலைகள் என்பதால் சஞ்சீவி மலை என்றும் மருந்துவாழ் மலை என்றும் இந்த மலைகளுக்கு பெயர் ஏற்பட்டது.