பதிவு செய்த நாள்
21
டிச
2017
01:12
கொடுமுடி: ஊஞ்சலூர், ஐயப்பன் கோவிலில், ஆராட்டு விழா மற்றும் மண்டல பூஜை விழா நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. ஐயப்பனுக்கு ஆராட்டு விழா மற்றும் 52ம் ஆண்டு மண்டல பூஜை விழாவை முன்னிட்டு, நாளை மறுதினம் காலை, 5:00 மணிக்கு மஹா கணபதி ஹோமத்துடன் தொடங்கி, 8:00 மணிக்கு தீர்த்தவாரி எனும், காவிரியில் ஐயப்பனுக்கு அபிஷேகம் மற்றும் ஆராட்டு விழா, 11:00 மணிக்கு சங்காபிஷேகம், தொடர்ந்து சிறப்பு யாக பூஜை மதியம், 12:30 மணிக்கு மஹா தீபாராதனை நடைபெறுகிறது. மாலை, 4:00 மணிக்கு குத்துவிளக்கு பூஜை, நாதஸ்வரம், கச்சேரி முழங்க பஜனை மாலை, 6:30 மணிக்கு மஹா தீபாராதனை நடக்கிறது.