பதிவு செய்த நாள்
22
டிச
2017
12:12
பண்ணாரி: பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியலில், 39 லட்சம் ரூபாய் காணிக்கை கிடைத்தது.சத்தியமங்கலத்தை அடுத்த, பண்ணாரியம்மன் கோவிலில், மாதந்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு, எண்ணப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் உதவி ஆணையர் ஹர்சினி, கோவில் துணை ஆணையர் பழனிக்குமார், பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில், 20 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. ராஜன்நகர் ஐ.ஓ.பி., ஊழியர்கள் மற்றும் காமதேனு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம், 39 லட்சத்து, 66 ஆயிரம் ரூபாய், 308 கிராம் தங்கம், 464 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்ததாக, அதிகாரிகள் கூறினர்.