பதிவு செய்த நாள்
22
டிச
2017
12:12
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், சாக்கியர் நாயனார் குரு பூஜை விழா நடந்தது.மார்கழி மாதம், பூராடம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் சாக்கிய நாயனார். கற்களையே பூக்களாக எண்ணி, பூஜை செய்து பேறு பெற்றவர். 63 நாயன்மார்களில் ஒருவரான, சாக்கிய நாயனாரின் குரு பூஜை விழா, காஞ்சிபுரத்தில், பல்வேறு அமைப்பு சார்பில் நடந்தது.காஞ்சிபுரம் அறுபத்து மூவர் குரு பூஜை விழாக்குழு சார்பில், கச்சபேஸ்வரர் கோவிவில் நடந்த குருபூஜை விழாவில், சாக்கிய நாயனாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைநடந்தது.அதேபோல், நால்வர் நற்றமிழ் மன்றம் சார்பில், காஞ்சிபுரம், வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடந்த விழாவில், சிறப்பு அபிஷேகம் நடந்தது.மகளிர் அணி சார்பில், பன்னிரு திருமுறை முற்றோதல் வழிபாடு நடந்தது. மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.