மதுரை: மதுரை வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி நடந்தது. தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறியதாவது: தெப்பக்குளம் பராமரிப்பின்றி அசுத்தமாக இருக்கிறது. சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. தெப்பக்குளத்தில் வளர்ந்துள்ள ஆகாயத் தாமரை, பாலிதீன் குப்பையை அகற்றினோம். குளத்தில் தேங்கிய கழிவு நீரில் அமிர்த கரைசலை ஊற்றி சுத்தம் செய்யதிட்டமிட்டுள்ளோம், என்றார். பொருளாளர் மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர்கள் நாகராஜன், குமரேசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.