கோபி: குண்டம் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, மொடச்சூர் தான்தோன்றியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நேற்று நடந்தது. கோபி அருகே மொடச்சூரில் பிரசித்தி பெற்ற, தான்தோன்றியம்மன் கோவில் உள்ளது. இங்கு குண்டம் தேர்த்திருவிழா, 13ல் பூச்சாட்டுடன் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக, நேற்று காலை அம்மனுக்கு, மகா அபி?ஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரம், கிராம சாந்தி மற்றும் கொடியேற்றம் நடந்தது. இதில் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதி பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை மாவிளக்கு பூஜை நடக்கிறது. முக்கிய நிகழ்வான, குண்டம் விழா, 28ல் காலை, 7:40 மணிக்கு கோலாகலமாக நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.