பதிவு செய்த நாள்
26
டிச
2017
12:12
சேலம்: சேலம் அழகிரிநாத சுவாமி, பாண்டியன் கொண்டை அலங்காரத்தில், நேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேலம், கோட்டையில் பிரசித்தி பெற்ற அழகிரிநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த, 18ல் துவங்கி நடந்து வருகிறது. பகல் பத்து உற்சவத்தின், ஏழாவது நாளான நேற்று அழகிரிநாத சுவாமிக்கும், ஸ்ரீதேவி, பூமி தேவிக்கும் அதிகாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு பாண்டியன் கொண்டை அலங்காரம் பெருமாளுக்கு சாத்துபடி செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 28ல் பகல்பத்து உற்சவம் நிறைவடைகிறது. வரும், 29ல் சொர்க்க வாசல் திறப்புடன் துவங்கும் ராப்பத்து உற்சவம் ஜனவரி, 9ல் நிறைவடைகிறது.