சிவசைலம் கோயிலின் பங்குனி உத்ஸவ திருமணம் ஆழ்வார்குறிச்சியில் நடைபெறும். இந்த உத்ஸவத்தின் பதினொராவது நாள் தேரோட்டம் முடிந்து விடியற்காலையில், ‘சப்தாவர்ணம் ’ என்னும் அபூர்வ நிகழ்ச்சி நடைபெறும். அந்த வேளையில் சிவபெருமான் மடியில் பார்வதிதேவி, பரமகல்யாணி எனும் பெயரில் தமது வலது கையினை மடியில் வைத்துப் பூப்பல்லக்கில் அமர்ந்து காட்சி தருவார். தீர்க்க சுமங்கலிகள் இந்த தெய்வ இணையை வணங்கினால், மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.