பதிவு செய்த நாள்
28
டிச
2017
01:12
குன்னுார் : குன்னுார் ஐயப்பன் கோவிலின், 51வது ஆண்டு திருவிழா விமரிசையாக நடந்தது. குன்னுார் ஐயப்பன் கோவிலில், 51வது ஆண்டு மண்டல பூஜை துவங்கியது. இதில், நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், அபிஷேக அலங்கார சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, உற்சவ கொடியேற்றப்பட்டு திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் அன்னதானம்வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நடந்தன. பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து செண்டை வாத்தியங்கள் முழங்க, தாளமேந்திய பெண்கள், விளக்குகளை ஏந்தி அணிவகுத்து வந்தனர். இதில், பாலகொம்புடன் கூடிய தேரில், உற்சவ மூர்த்தி புலி வாகனத்தில் பவனி வந்தார். வெளிச்சப்பாடு ஆட்டம் இடம் பெற்றது. ஊர்வலம் கோவிலில் துவங்கி, பஸ் ஸ்டாண்ட், கேஷ்பஜார், வி.பி.தெரு வழியாக கோவிலை மீண்டும் அடைந்தது. ஏற்பாடுகளை குன்னுார் ஐயப்ப பக்த சங்க நிர்வாகிகள், ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.