சென்னை: புத்தாண்டை ஒட்டி, நள்ளிரவில் கோவில்களை திறக்க தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது புத்தாண்டு இரவன்று கோவில்களை திறக்க தடை விதிக்க மறுத்த கோர்ட், வழக்கு குறித்து பதிலளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 8க்கு ஒத்திவைத்தது.