பதிவு செய்த நாள்
28
டிச
2017
02:12
செஞ்சி : செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில், புத்தாண்டு விழா ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடந்த கூட்டத்திற்கு வழிபாட்டு குழு செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். விழா குழு உறுப்பினர்கள் ரமேஷ், முன்னாள் ஊராட்சி தலைவர் தீபாவளி ஏழுமலை, சீனுவாசன் முன்னிலை வகித்தனர். டாக்டர் ரமேஷ்பாபு, நெல் அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் குமரேசன், விழா குழுவினர்கள் பாரத் அண்ணாதுரை, ரவிச்சந்திரன், சோமு, முருகன், சண்முகம், ரகுபதி, தினேஷ்குமார், முன்னாள் கவுன்சிலர் சீனுவாசன் கலந்து கொண்டனர். செல்வம் நன்றி கூறினார். இதில் புத்தாண்டு அன்று சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்வதுடன், பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் வழங்குவது என்றும் முடிவு செய்தனர்.