பதிவு செய்த நாள்
28
டிச
2017
02:12
ராசிபுரம்: கட்டனாச்சம்பட்டி, பொன்வரதராஜ பெருமாள் கோவிலில், நாளை, வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட உள்ளது. ராசிபுரம் அருகே, கட்டனாச்சம்பட்டி பொன்வரதராஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, மூன்றாம் ஆண்டாக, நாளை கொண்டாடப்படுகிறது. அதிகாலை, 3:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, திருக்கொடி ஏற்றுதல், தொடர்ந்து, 5:30 மணிக்கு, பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி தாயார் மற்றும் வீர ஆஞ்சநேருயருக்கு ஏகாதசி விழா நடக்கிறது. லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
* மல்லசமுத்திரம் ஒன்றியம், பருத்திபள்ளி ஆதிலட்சுமி, ஆதிகேசவபெருமாள் கோவிலில், நாளை காலை, 5:00 மணிக்கு, ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்க வாசல் திறப்புவிழா நடக்கவுள்ளது. இன்று இரவு முழுவதும் சுவாமிக்கு பல்வேறு விசேஷ பூஜை மற்றும் ஆராதனை நடைபெறும். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் செய்துள்ளனர்.