பதிவு செய்த நாள்
30
டிச
2017
10:12
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடந்த சொர்க்கவாசல் திறப்பு விழாவில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அதிகாலை 4:30 மணிக்கு நடைதிறக்கப்பட்டதை தொடர்ந்து பெரியபெருமாள், ஆண் டாள், ரெங்கமன்னார் மூலஸ்தினத்திலிருந்து புறப்பட்டனர். சிறப்பு பூஜைகள் பின் காலை 7:05 மணிக்கு சொர்க்கவாசல் வழியே பெரியபெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னாரும் எழுந்த ருளினர். அவர்களை ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவித்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.பின்னர் மாடவீதி, கந்தாடை வீதி வழியாக ராப் பத்து மண்டபத்திற்கு சுவாமிகள் எழுந்தருளினர். அங்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம், திரு வாய்மொழி துவக்கம், அரையர் அருளிப்பாடு, பெரிய பெருமாள் பக்தி உலாவுதல், அரையர் வியாக்யானம், சேவாகாலம் மற்றும் கோஷ்டி நடைபெற்றது.மணவாளமாமுனி ஜீயர் சுவா மிகள், எம்.எல்.ஏ., சந்திரபிரபா, தக்கார் ரவிசந்திரன், இணை ஆணையர் ஹரிஹரன், உதவி ஆணையர் செந்தில்வேலன் உட்பட பல்வேறு மாவட்ட பக்தர்களும் பங்கேற்றனர்.