நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2017 09:12
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் வழியே வேணுகோபால சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சன மும் தீபாராதனையும் நடந்தது.அதிகாலை பாமா ருக்குமணி சமேதராய் வேணுகோபால சுவாமி சொர்க்க வாசல் வழியே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கீழ்பட்டாம்பாக்கம் ராமர்கோவில் பூலோகநாதர் கோவில்களிலும் சொர்க்கவாசல் வழியே பெருமாள் எழுந்தரு ளினார்.