பதிவு செய்த நாள்
30
டிச
2017
12:12
மணலிபுதுநகர்: மணலிபுதுநகரில், குழந்தை இயேசு கோவில், 38ம் ஆண்டு பெருவிழா,
இன்று, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
மணலிபுதுநகர், குழந்தை இயேசு கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலின், 38ம் ஆண்டு பெருவிழா, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.அதன்படி, மாலை 5:30 மணிக்கு, சென்னை, மயிலை உயர் மறைமாவட்ட முதன்மை குரு.அந்தோணிசாமி, கொடி ஏற்றுகிறார்.
ஜன., 7ம் தேதி வரை, ஒன்பது நாட்கள் நடைபெறும் திருவிழாவில், ஆண்டின் முதல் வியாழன், 4ம் தேதி, அற்புத குழந்தை சிறப்பு நாளாக கொண்டாடப்படும். தொடர்ந்து, 5ம் தேதி, வெள்ளிக் கிழமை, நற்கருணை பெருவிழா நடக்கும்.தேர்த்திருவிழா, 6ம் தேதி மாலை, 5:30 மணிக்கு நடக்கும். 7ம் தேதி மாலை, கொடியிறக்கத்துடன் விழா நிறைவுறும்.